......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Sunday, 27 January 2013
வாக்குச் சீட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை!
By Kavinthan Shanmugarajah கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட சுமார் 300 வாக்குச் சீட்டுக்கள் நிட்டம்புவ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்தவுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நிட்டம்புவ கலகெடிஹேன பகுதியில் உள்ள பாடசாலையொன்றிலிருந்தே மேற்படி வாக்குச் சீட்டுக்கள் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டன.
இவ்விடயம் தொடர்பில் தமக்கு அறியக்கிடைத்துள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் யு. அமரதாச தெரிவித்துள்ளார்.
மேற்படி வாக்குச் சீட்டுக்கள் 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் நுவரெலிய மாவட்டத்தில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும் அச் சீட்டுக்களில் 'அன்னம்' சின்னத்துக்கு புள்ளடியிடப்பட்டுள்ளன. இச்சினத்திலேயே சரத் பொன்சேகா போட்டியிட்டிருந்தார்.
பொது எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டிருந்த சீட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமையானது ஜனாதிபதித் தேர்தலின் நம்பகத் தன்மை தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பொன்சேகாவிற்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டிருந்த வாக்குச்சீட்டுக்கள் சில இரத்னபுரி தொழிநுட்பக் கல்லூரி அருகில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
அவை அனைத்தும் போலி வாக்குச்சீட்டுக்கள் அல்லவெனவும் அவை அசலானவையென்றும் அக்காலப்பகுதியில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.