......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Sunday, 27 January 2013
இந்தியாவின் அக்னி -5 ஏவுகணை குறித்து சீனா ஆச்சர்யம்
இந்தியாவின் 64-வது குடியரசு தின விழாவில் சுமார் 6 ஆயிரம் கி.மீ தூரம் வரை சென்று எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் வகையில் தயாரிக்கப்பட்டு இராணுவத்தில் சேர்க்கப்பட்ட அக்னி 5 ஏவுகணை இடம்பெற்றிருந்தது.
இது குறித்து சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பாக். ஆக்ரமிப்பு காஷ்மீரில் சாலை வசதியை அமைத்தும் அருணசால பிரதேச மாநிலத்திற்கும் உரிமை கொண்டாடி வரும் சீனா மறைமுகமாக இந்தியாவுடன் மோதல் போக்கை கையாண்டு வருகிறது.
இந்நிலையில் குடியரசு தின விழாவில் இடம் பெற்ற அக்னி ஏவுகணை குறித்து அந்நாட்டின் இணைய தளத்தில் மிக பரபரப்பான செய்தியாக வெளியிட்டுள்ளது.
நீண்ட தொலைவு சென்று தாக்கும் வகையில் ஏவுகணைகளை தயாரித்து வைத்துள்ள வளர்ச்சியடைந்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் வரிசையில் இந்தியா சேர்ந்துள்ளதாக அந்த இணைய தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லியான் குவாங்லி இந்திய பயணத்தை தொடர்ந்து வரும் ஆண்டுகளில் இருநாட்டு இராணுவ பிரிவின் மூலம் கூட்டு பயிற்சி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.