......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 31 January 2013

சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்


-நவரத்தினம்,ரொமேஷ் மதுசங்க 

வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துமாறு கோரி சகோதரத்துவத்திற்கான மக்கள் அரண் அமைப்பு வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது. 

வவுனியா பஸ் நிலையத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

'வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகத்தை உறுதிசெய்', 'சட்டவிரோதக் கைதுகள், கடத்தல்களை உடனடியாக நிறுத்து', 'வடக்கில் நடத்தும் காணி அபகரிப்பை உடன் நிறுத்து', 'அனைத்து அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்', 'கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்' ஆகிய கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பியதுடன், பதாகைகளையும் தாங்கியிருந்தனர்;.

மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் உட்பட சகோதாரத்துவத்திற்கான மக்கள் அரண் அமைப்பின் உறுப்பினர்கள் பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். 










(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE