......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Thursday, 31 January 2013
பிரதேச எல்லை நிர்ணயம் தொடர்பில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் - ஜனாதிபதி ஆலோசகர் சந்திரகாந்தன் கலந்துரையாடல்
By Farhan
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் எல்லை நிர்ணயப் பிரச்சினை தொடர்பில் ஆராயும் உயர்மட்டக்கூட்டமொன்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் விஷேட ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்குமிடையில் நடைபெற்றது.
நேற்றிரவு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பிராந்தியக் காரியாலயத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மாவட்டத்தில் காணப்படும் எல்லை நிர்ணயப் பிரச்சினை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் இது தொடர்பில் பிரதேச செயலகங்களுடன் பேசி உடனடி நடவடிக்கையும் எடுக்கவுள்ளதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஊடக இணைப்பாளர் எம்.எஸ்.எம்.சஜி தெரிவித்தார்.
இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எல்.எம்.பரீட், பூ.பிரசாந்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, உள்ளூராட்சி சபை நிறுவனங்களின் கீழ் பிரதேச எல்லை நிர்ணயம் செய்து முடிக்கப்படும் வரை மட்டக்களப்பில் உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்தப்பட மாட்டாதென தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.