......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Monday, 28 January 2013
மத்திய மாகாண முதலமைச்சரை வழிமறித்து ஆர்ப்பாட்டம்
By Hafeez கண்டி - உடதும்பறை குட்சைட் பிரதேசத்தில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவை வழிமறித்து பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
மேற்படி பிரதேசத்தினூடாக முதலமைச்சர் குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று திரும்பும் வழியில் காத்திருந்த பொதுமக்கள் மேற்படி ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
மேற்படி பாதை சேதமடைந்து காணப் படுவதாகவும் அப்பாதையை செப்பனிட்டு அபிவிருத்தி செய்துதருவதாக மத்திய மாகாண முதலமைச்சர் முன்பு உறுதியளித்த போதும் அது நடைமுறைப்படுத்தப்பட வில்லை எனத் தெரிவித்தே மேற்படி பாதையை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்னர்.
இதன் காரணமாக முதலமைச்சரின் பயணம் சில மணித்தியாலங்களாகத் தடைப்பட்டதாகவும் பின்னர் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க வழங்கிய உறுதியை அடுத்து மக்கள் கலைந்து சென்றதாகவும் தெரியவருகிறது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.