......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 7 January 2013

ஆற்றில் மூழ்கி மீனவர் மரணம்

(எஸ்.மாறன்)

திருக்கோவில், விநாயகபுரம் மரணகண்டியாற்றின் ஊடாக மங்கமாரி தோட்ட  பிரதேசத்திற்கு பொதுமக்களை தோணியில்இறக்கிவிட்டு திரும்பும் போது தோணி ஆற்றில் கவிழ்ந்;ததில் தோணி ஓட்டியான மீனவர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலையில் இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர் 
இவ்வாறு உயிரிழந்தவர் விநாயகபுரம் 4ஈம் பிரிவு வீரையடி வீதியை சேர்ந்த 55 வயதான நாகமணி செல்வராஜா என்பவராவார்.

உயிரிழந்தவரின் சடலம் இரவு 7 மணியளவில் மீட்கப்பட்டு திருக்கோவில் வைத்தியசாலையில் ஒப்டைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE