......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 7 January 2013

விமான பணிப்பெண்ணுக்கான நேர்முகத் தேர்வுக்கு போறீங்களா?

பெண்களின் பெரும் பறக்கும் கனவு என்றால் அது விமான பணிப்பெண் ஆக வேண்டும் என்ற கனவைத் தவிர வேற என்னவாக இருக்க முடியும்.
அதற்கு அழகு மட்டும் இருந்தால் போதாது. ஒவ்வொரு கட்டத்திலும் தேர்வை எதிர் நோக்கி பயணிக்க வேண்டும். நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை, பொறுமை, சகிப்புத்தன்மை, சாதுரியம்... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆதலால், உங்களின் கவனத்திற்காக இதோ சில டிப்ஸ்....


* முதலில் உங்களுக்கு ஆர்வமும், அத்துறையில் கவனமும் அவசியம் இருக்க வேண்டும்.

* எதற்கும் பதற்றப்படாத மன அமைதியும், காலம் தவறாமையும் அவசியம்.

* காதில் போடும் ஆபரணத்தைத் தவிர வேறு நகைகள் எதுவும் வேண்டாம்.

* ஓரளவு அழகாக இருந்தால் போதும். ஓவர் மேக்-அப் தேவையில்லை.

* உடலில் பச்சை குத்துவது...டாட்டூஸ் வரைவது என்று அதிகப்படியாக எதுவும் செய்ய வேண்டாம்.

* முகத்தின் முன்புறம் முடியை விடுவது... ஹேர் டை அடித்திருப்பது என்று எக்ஸ்ட்ராவாக எதுவும் தேவையில்லை. முடியை நன்றாக தூய்மை செய்து கொண்டை போட்டு "பின்" அடித்திருந்தால் போதும்.

* ஸ்கர்ட் அணிந்திருந்தால் காலுறைகள் அவசியம். அதேபோல் உட்காரும்போது ஸ்கர்ட் சிறியதாக இருக்கக் கூடாது.

* உடைக்கு தகுந்த ஷூவை அணியவேண்டும்.

* எப்பொழுதுமே உங்கள் கையில் ஆவணங்கள் அடங்கிய கோப்பு இருக்க வேண்டும்.

* பெண்கள் உட்காரும்போது கால்களை குறுக்குவாட்டில் வைத்து அமரவேண்டும்.

* உட்கார்ந்தபடி கால்களை ஆட்டுவதோ...அசைப்பதோ கூடவே கூடாது.

* தேர்வாளர்களை அவர்களின் பெயரைச் சொல்லி 'விஷ்' பண்ணுவது நல்லது. உட்காரச் சொல்லும்வரை காத்திருக்க வேண்டும்.

* தேர்வின் போது ரொம்ப ரிலாக்ஸாக இருக்கவேண்டும். தேர்வாளர்கள் கேள்விகளுக்கு விடைகளை யோசித்துச் சொல்வது நல்லது. எதற்கும் அவசரமோ, பதட்டமோ வேண்டவே வேண்டாம்.

* கேள்வி புரியவில்லை என்றால் மீண்டும் கூறுமாறு தேர்வாளர்களிடம் கேட்கலாம்.

* வேகமாக பேசாமல் அமைதியாகவும், தெளிவாகவும் பேசவும். பதில்களை உதாரணத்துடன் முழுமையாக கூறுவது சிறப்பு.

* அவர்களுடன் உரையாடுவது போல் இருந்தால் தேர்வாளர்களுக்கு உங்களை மிகவும் பிடிக்கும்.

* விமானம் குறித்த தற்போதைய செய்திகளை அறிந்து கொள்ளவும்.

* உங்களுடைய ஸ்பெஷல் என்ன? என்று கேட்டால் 'அதிகப்படியாக' எதுவும் சொல்ல வேண்டாம்.

* அதே மாதிரி, உங்களுடைய வீக்னஸ் விஷயங்களை 'மூச்' விட வேண்டாம்!

நேர்முகத் தேர்வுக்கு முன்பே கீழ் வரும் கேள்விகளுக்கு பதில்களை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்:

* விமான பணிப்பெண்ணாக இருக்க ஏன் விரும்புகிறீர்கள்?

* இந்த வேலையை உங்களுடைய தொழிலாக கருதுகிறீர்களா?

* உங்களுடைய தற்போதைய தொழில் அல்லது வேலை என்ன?

* உங்களுடைய பொழுதுபோக்கு என்ன?

* பயணிகள் அருந்தும் மதுபானத்தை எடுத்து வர மறந்து விட்டால் என்ன செய்வீர்கள்?

(இந்த கேள்விக்கு மிகவும் கவனமாக... பாஸிட்டிவ்வாக... பதில் சொல்லவும்)

எல்லாவற்றிற்கும் முக்கியமானது, முடிந்து வெளியே வரும்வரை சிரித்தவாறே பதில் சொல்ல வேண்டும். பேசும்போது தன்னம்பிக்கையுடன் பேசுவது சிறப்பு. கடைசியாக நன்றி கூறிவிட்டு வெளியேறவும்.





(rai)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE