ஏறாவூர் 5ம் குறிச்சியில் அமைந்துள்ள கிராம நீதிமன்றத்தின் புனரமைப்புப் பணிகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த போதிலும் முற்றுப் பெறாமல் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது.
நீதி அமைச்சராக கெளரவ றவூப் ஹக்கீம் அவர்கள் பதவி ஏற்ற ஒருவாரத்தில் இக்கிராம நீதிமன்றத்தை புனரமைப்பு செய்ய பணிப்புரைகளை வழங்கியதுடன் தற்காலிக கட்டடத்தில் கிராம நீதிமன்றத்தை இயங்கச் செய்யவும் செய்தார். தற்போது நீதிமன்றம் இயங்கும் கட்டடம், கிராம அபிவிருத்தி சங்கத்தின் பல நோக்கு தேவைகளுக்காக கட்டப்பட்ட கட்டடம் ஆகும்.
சுமார் 100 வருடங்கள் பழைமை வாய்ந்த பழைய கிராம நீதிமன்ற கட்டடத்தை புனரமைப்பு செய்வதற்கு ஏற்றுக்கொண்ட ஒப்பந்தக்காரர், கட்டடத்தை புனரமைப்பு செய்யாமலே பணத்தை பெற்றுக் கொண்டு தலைமறைவாகி விட்டதாக பொதுமக்கள் கூறுவதால் கிராம நீதிமன்றத்தை உடனடியாக புனரமைப்பு செய்து புதிய கட்டடத்தில் நீதிமன்றத்தை இயங்க வைப்பது நீதியமைச்சின் கடமையென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.