பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை பதவி நீக்கம் செய்வதான யோசனை மீதான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு கூறினார்.
அரசாங்கத்தில் பதவி வகிப்பவர்கள் சட்டத்தை மதிக்க தெரிந்திருக்க வேண்டும். ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பதவியை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே நாடாளுமன்றத்தில் இந்த விவாதம் இடம்பெற்று வருகின்றது என்றும் அமைச்சர் சிறிசேன இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.
பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை விவகாரத்தில் அரசாங்கம் அரசியலமைப்பின் பிரகாரமே செயற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எந்தவொரு பக்கச்சார்புமின்றி முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று அரச கரும மொழிகள் விவகார அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
எவர் குற்றம் செய்தாலும் அது நிரூபிக்கப்படும் பட்சத்தில் அந்நபரை நீக்க வேண்டும். அந்த கடமையினையே அரசாங்கம் இன்று செய்துள்ளது என்று விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.