......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 14 January 2013

சவூதிக்கான இலங்கைத் தூதுவர் திருப்பியழைக்கப்பட்டதன் காரணம் என்ன?


By Kavinthan Shanmugarajah சவூதி அரேபியாவுக்கான புதிய தூதுவர் ஒருவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அரசின் பலதரப்பட்ட வேண்டுகோள்களையும் மீறி சவூதி அரேபியாவில் பணிப்பெண் ரிசான நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து அந்நாட்டுக்கான தூதுவர் அஹமட் ஜவாத் உடனடியாக திருப்பியழைக்கப்பட்டிருந்தார்.
சவுதி அரேபியாவிற்கு தமது அதிருப்தியை தெரிவிக்கும் முகமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பித்தில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் அஹமட் ஜவாதின் பதவிக்காலம் கடந்த டிசம்பர் மாதத்துடனே நிறைவடைந்து விட்டதாகவும் அதன் காரணமாகவே அவர் திருப்பி அழைக்கப்பட்டதாகவும் வேறு சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் சவூதி அரேபியாவிற்கு புதிய தூதுவரொருவர் கூடிய விரைவில் நியமிக்கப்படுவார் எனத் தெரியவருகின்றது.



(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE