......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 14 January 2013

மேற்குக் கரையில் கூடாரமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியோர் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்

சட்டவிரோத யூத குடியிருப்புக்கு எதிர்ப்பு

மேற்குக் கரையில் இஸ்ரேல் அமைக்கவுள்ள புதிய சட்டவிரோத குடியிருப்புகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதியில் கூடாரமிட்டு எதிர்ப்பு வெளியிட்ட பலஸ்தீன மற்றும் சர்வதேச செயற்பாட்டாளர்களை இஸ்ரேல் பொலிஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.

ஜெரூசலம் மற்றும் யூத குடியிருப்பான மால் ஆகியன அமைந்திருக்கு பகுதிகளுக்கு இடைப்பட்ட ‘ஈ-1’ என்ற இடத்தில் 20 கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செயற்பாட்டாளர்களையே பொலிஸார் சனிக்கிழமை இரவு வெளியேற்றினர். இது தொடர்பில் இஸ்ரேல் உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை, மேற்படி கூடாரங்கள் 6 தினங்களுக்கு நீடிக்க உத்தரவிட்ட நிலையிலேயே அவை அகற்றப்பட்டுள்ளன.
‘ஈ-1’ பகுதியில் இஸ்ரேல் அமைக்கவுள்ள புதிய யூத குடியிருப்புகள் தமது எதிர்கால பலஸ்தீன தேசத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பலஸ்தீன நிர்வாகம் கூறி வருகிறது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செயற்பாட்டாளர்கள் பொலிஸாரால் வெளியேற்றப் பட்டபோது 6 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பலஸ்தீன செயற்பாட்டளர்கள் குழுக்களில் ஒன்றான மக்கள் போராட்ட இணைப்பு குழுவின் பேச்சாளர் அபிர் கொப்பி குறிப்பிட்டார். எனினும் இதன்போது எவரும் காயமடையவில்லை என இஸ்ரேல் பொலிஸ் பேச்சாளர் மிக்கி ரொசன் பில்ட் குறிப்பிட்டார்.
இஸ்ரேல் சட்டவிரோத குடியிருப்பு அமைக்க திட்டமிட்டிருக்கும் ‘ஈ-1’ பகுதியில் தாம் ‘பாப் அல் ஷம்ஸ்’ என்ற பெயரில் கிராமம் ஒன்றை அமைக்க திட்டமிட்டிருப்பதாக செயற்பட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். பலஸ்தீன வரலாறு தொடர்பிலான புகழ்பெற்ற நாவலின் பெயரே ‘பாப் அல் ஷம்ஸ்’ என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு கூடாரமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட செயற்பாட்டாளர்களில் பலஸ்தீன முன்னணி அரசியல்வாதி முஸ்தபா பார்குதியும் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவரும் இஸ்ரேல் பொலிஸாரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட் டுள்ளார். அங்கு அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களும் நேற்று அதிகாலை அகற்றப்பட்டன.
பலஸ்தீனம் ஒருதேசம் என்ற நிலையில் ஐ. நா. சபை கடந்த நவம்பரில் அங்கீ காரம் அளித்ததைத் தொடர்ந்தே இஸ்ரேல் குறித்த ‘ஈ-1’ பகுதியில் புதிதாக யூத குடியிருப்புகளை அமைக்கும் அறிவிப்பை வெளியிட்டது. இந்த திட்டத்திற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனம் வெளியானது.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE