......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Monday, 14 January 2013
மேர்வின் சில்வாக்கு வெளிநாட்டு உயர்ஸ்தானிகர் பதவி?
By Kavinthan Shanmugarajah ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதியின் முன்னாள் அமைப்பாளரும் , பாராளுமன்ற உறுப்பினருமான மேர்வின் சில்வாக்கு வெளிநாட்டு உயர்ஸ்தானிகர் பதவியொன்று வழங்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட களனி பிரதேச சபை உறுப்பினர் ஹசித்த மடவலவின் கொலையின் பின்னர் மேர்வின் சில்வாமீது பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதையடுத்து களனி தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் தனக்கு வெளிநாடொன்றுக்கான உயர் ஸ்தானிகர் பதவியொன்றை வழங்குமாறு மேர்வின் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலர் மேர்வின் சில்வா மீது நடவடிக்கை எடுக்கும் படி ஜனாதிபதியை வலியுறுத்தியுள்ளதாகவும் இதனால் ஜனாதிபதி மேர்வின் சில்வா மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கட்சியினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கும் தான் தயாராகவுள்ளதாக மேர்வின் ஜனாதிபதியிடம் கூறியுள்ளதுடன்தனக்கு வெளிநாடொன்றிற்கான உயர் ஸ்தானிகர் பதவியை வழங்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.