......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 23 January 2013

முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது: லக்ஷ்மன் கிரியெல்ல

முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதோடு அம் மக்களுக்குள்ள வர்த்தகம் செய்யும் உரிமை தடுக்கப்படுகிறது.
இதன் பின்னணியில் அரசாங்கமே இருப்பதாக ஐ.தே.க.வின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.

முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் பதில் கூறாது முஸ்லிம் அமைச்சர்கள் ஒழிகின்றனரென்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்ட மூலம் மீதான விவாதத்தின் போதே லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

இன்று முஸ்லிம்களுக்கு வர்த்தகம் செய்ய முடியவில்லை. அம் மக்களுக்கு நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றது. இனவாதத்தை தூண்டிவிட்டு எதிர்வரும் தேர்தல்களில் வெற்றி பெறவே அரசு முயற்சிக்கின்றது.

எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு அரசாங்கம் இந்த சட்ட மூலத்தை கொண்டு வருகின்றது என்றார்.



(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE