கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவை கட்சியின் பிரதித்தலைவராக மீண்டும் நியமிக்கப்படாது ஏன்? என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அங்கு அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,
கட்சிக்கும் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் பிரச்சினையேதும் இல்லை. ஆயினும் அடுத்த பிரதி தலைவர் பதவி பற்றி தீர்மானிக்கும்போது கட்சியின் வேலைத்திட்டத்துக்கு அமைய வேலை செய்வது முக்கிய அம்சமாக கவனிக்கப்படும்.
கட்சியின் தலைவர் இந்த பதவிக்காக தனது வேட்பாளரை குறிப்பிட்ட கால அவகாசம் கேட்டததால் பிரதி தலைவர் பதவியை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இவ்வருடம் நடைபெறவுள்ள மத்திய மாகாண தேர்தலுக்கான பிரசார அணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் அமரதுங்க, கபிர் ஹாசிம், தயா கமகே ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
அத்துடன், வடமேல் மாகாண தேர்தலுக்கான பிரசார அணியில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா,ரவி கருணாநாயக்க, மங்கள் சமரவீர, ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்ட அமைப்பாளராக பதவி வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதுடன் அந்த பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். என்றும் அவர் தெரிவித்தார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.