......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 7 January 2013

நிந்தவூரில் மழையால் பாதிக்கப்பட்ட வீதிகள் சீரமைப்பு, பா. உ. பைசால் காசிம் களத்தில்


Ninthavur Road (4)- அஸ்லம் எஸ். மௌலானா -
அம்பாறை மாவட்டத்தல் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நிந்தவுரில் பாதிக்கப்பட்டுள்ள வீதிகளை சீரமைக்க அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் களத்தில் இறங்கி அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
வெள்ளம் காரணமாக நிந்தவூரின் முக்கிய பாதைகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பொதுமக்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் போக்குவரத்துக்களை மேற்கொள்கின்றனர்.
இதனை பிரதேச மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்தபோது இன்று காலை அவர் உடன் அவ்விடங்களுக்கு விஜயம் செய்து வீதிகளின் அவல நிலைமைகளை நேரடியாக கண்டறிந்து அவற்றை சீரமைக்க அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
குறிப்பாக மழை காரணமாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட அலியான் சந்தி வீதி, அல்மஸ்லம் பாடசாலை வீதி, சர்ஜன் இர்சாத் வீதி போன்ற பாதைகளை பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தனது சொந்த நிதியில் இருந்து கிரசர் மண் வரவழைக்கப்பட்டு நிந்தவூர் 8ம் பிரிவு கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மூலம் அவரது கண்காணிப்பில் உடனடியாக செப்பனிடப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கைகளில் நிந்தவூர் பிரதேச சபை உப தவிசாளர் எம் எம் எம் அன்சார் அவர்களும் பங்கேற்றிருந்தார்.



(kattankudy)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE