......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Monday, 7 January 2013
அமெரிக்காவின் வயது கூடிய பிரஜை மரணம்
அமெரிக்காவில் வாழ்ந்து வந்த 114 வயது மூதாட்டி மரணமடைந்ததாக அவரது இரு மகள்கள் தெரிவித்துள்ளனர். குறித்த மூதாட்டியின் பெயர் மெமி ரியர்டென்.
இவர் இருவாரங்களுக்கு முன் அமெரிக்காவின் அதிக வயதான மூதாட்டி என ஆய்வில் தெரியவந்ததது.
கடந்த மாதம் 115 வயதான மூதாட்டி மறைந்ததை அடுத்து இவர்தான் அதிக வயதான மூதாட்டி என கருதப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர்.
ஜோர்ஜியாவின் ஒகஸ்டாவில் அமைந்துள்ள வைத்தியசாலையில் மெமி ரியர்டன் உயிரிழந்ததாக அவரின் மகள்கான மார்தா ரியர்டன் மற்றும் மேரி மெகெய்ன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
அவர் உயிரிழப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் வலுக்கி விழுந்தால் அவரது இடுப்பு உடைந்து விட்டதாக அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர்.
இவர் உலகின் அதிக வயது கூடியவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரான 115 வயதான ஜப்பானின் ஜிரோமொன் கிமுராவை விட 1 வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.