......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 31 January 2013

பலஸ்தீன வரி வருவாயை விடுவித்தது இஸ்ரேல்


முடக்கி வைக்கப் பட்டி ருந்த பலஸ்தீன நிர்வாக த்தின் வரி வரு வாயில் 100 மில்லியன் டொலரை இஸ்ரேல் நேற்று விடுவித்துள்ளது.

பலஸ்தீன நிதி நெருக்கடியை கருத்தில்கொண்டே இந்த தொகை விடுவிக்கப்பட்டதாகவும் இது தற்காலிகமான நடவடிக்கை என்றும் இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
பலஸ்தீன மக்களிடம் இருந்து பெறப்படும் வரி வருவாயை பலஸ்தீன நிர்வாகத்திற்கு வழங்குவதை இஸ்ரேல் கடந்த டிசம்பரில் முடக்கியது.
பலஸ் தீனம் ஐ.நா.வின் அங்கத்துவமற்ற பார்வையாளர் அந்தஸ்தை பெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்தது. இதனால் பலஸ்தீன நிர்வாகம் ஆயிரக் கணக்கான அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் தடுமாறி வருகிறது.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE