......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 14 January 2013

பிரதம நீதியரசரை பதவி விலகாவிடின் அலுவலகத்திற்கு சீல் வைக்க முடியும்: தே.தே.இ.

பதினெட்டாவது திருத்தத்தால் பிரதம நீதியரசரை அப்பதவியிலிருந்து ஜனாதிபதியால் வெளியேற்ற முடியும். அதனை சட்டம் தடுக்க முடியாது. சட்டத்தின் ஆணைக்கு அப்பாற்பட்டவர் ஜனாதிபதி என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.


இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,

பிரதம நீதியரசருக்கு எதிராக அரசாங்கம் குற்றவியல் பிரேரணையை கொண்டு வந்து பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையால் நிறைவேற்றியுள்ளது. இந்த தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிரதம நீதியரசரை வெளியேற்றும் கடிதத்தில் ஜனாதிபதி கையெழுத்திட்டு அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால், பிரதம நீதியரசர் நீதிமன்றம் தனக்கு சார்பாக வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஜனாதிபதியின் கடிதத்தையும் ஏற்காது பலாத்காரமாக பதவியை பிடித்துக் கொண்டுள்ளார். இது சட்டவிரோதமாகும்.

பிரதம நீதியரசர் இவ்வாறு அடம் பிடித்தால் 18 ஆவது திருத்தத்தால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி பிரதம நீதியரசரை வெளியேற்ற முடியும் என்றார்.



(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE