றிஸானாவின் விடயத்தில் இலங்கை அரசாங்கம் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டது.
முதலாவதாக றிசானாவிடம் குழந்தையைக் கொலை செய்யும் நோக்கம் முன் கூட்டியே இருந்தது என்பது நிரூபிக்கப்படவில்லை.
இரண்டாவதாக ஒரு குழந்தைக்கு பாலூட்டும் சந்தர்ப்த்தில் பால் தவறுதலாக மூச்சுக் குழாயுள் சென்றால் மூச்சுத் திணறிக் குழந்தை இறக்கும் வாய்ப்புண்டு. தாய்மார் பாலூட்டுகையில் வைத்தியசாலையிலேயே இப்படி இறந்த குழந்தைகளை நான் கண்டிருக்கிறேன். ஒரு குழந்தை கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதா அல்லது பால் தவறுதலாக மூச்சுக் குழாயுள் சென்றதால் இறந்ததா என்பதைப் பிரேத பரிசோதனையில் உறுதியாகச் சொல்ல முடியும். இந்தக் குழந்தையில் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை. ஆகவே கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
மூன்றாவதாக றிஸ்னா குழந்தையின் தொண்டையைத் தடவியதைச் சிறு குழந்தைகள் பார்த்து விட்டுக் கழுத்தை நெரித்ததாக முறைப்பட்டிருக்கிறார்கள். இந்த சாட்சியம் நம்பக் கூடியதா?
நான்காவதாகக் கேரளாவைச் சேர்ந்த மந்தை மேய்க்கும் மலையாளி ஒருவர்தான் மொழிபெயர்த்து இருக்கிறார். கேரள மலையாளி ஒருவர் இலங்கையின் கிழக்கு மாகணப் பேச்சுத் தமிழை எவ்வளவு புரிந்து கொண்டார் என்பது கேள்விக் குறியே. இத்தனைக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த எத்தனையோ பேர் மக்கா மதீனாப் பல்கலைக் கழகங்களில் பணி புரிகிறார்கள். அவர்களின் சேவையைப் பெற்றுக் கொள்ளத் தவறியது ஏன்?
ஐந்தாவதாக ஒரு நல்ல வழக்கறிஞரை அமர்த்தியிருந்தால் இந்த வழக்கில் ஒருவேளை வென்றிருக்கலாம். அதற்குப் போதிய பணம் இலங்கைத் தூதுவராலயத்தில் இல்லையாம். ஒரு நல்ல வழக்கறிஞரின் சேவையைப் பெற வக்கில்லாதவர்கள் இப்போது இலட்சக்கணக்கில் இரத்தக் காசு பற்றிப் பேசுகிறார்கள். துப்பில்லாத தூதராலயம் துண்டை விரித்திரிந்தால் அங்கு பணிபுரியும் இலங்கையர்கள் இலட்சக் கணக்கில் வாரி வழங்கி இருப்பார்கள்.
இவற்றையெல்லாம் விட்டு விட்டு இப்போது யாருக்குக் கதை சொல்கிறார்கள்?
இவர்களால் முடியுமானால் ஜனாதிபதி நிதியில் இருந்து றிசானாவின் குடும்பத்தினருக்காகக் குறைந்த பட்சம் ஐந்து மில்லியன் ரூபாய் பணம் பெற்றுக் கொடுக்க முயுமா?இது இரண்டு பெண் குழந்தைகளுக்கு வீடு கட்டவும் றிசானாவின் தந்தை ஏதாவது தொழில் செய்யவதற்கும் உதவியாக இருக்கும்.
டாக்டர் எம்.எல். நஜிமுதீன்.
COMMENT FROM : (kattandudyinfo)

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.