......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 14 January 2013

போர் நிறுத்த மீறல் நீடித்தால் வேறு வாய்ப்பை யோசிப்போம்: இந்திய விமானப் படை எச்சரிப்பு!


எல்லைப் பகுதியில் போர் நிறுத்த மீறல்கள் தொடர்ந்தால் வேறு வாய்ப்புகளைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கும்  என பாகிஸ்தானுக்கு விமானப் படை தளபதி என்.ஏ.கெ. பிரவுன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், இருநாடுகளிடையே எல்லைக் கட்டுப்பாடு உள்ளது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது.
 கடந்த சில நாட்களாக நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் ஏற்கத்தக்கது அல்ல. இத்தகைய நிலைமைகளை எதிர்கொள்ள நம்மிடமும் சில கட்டமைப்புகள் இருக்கின்றன.
எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இத்தகைய யுத்த நிறுத்த மீறல்கள் தொடர்ந்து நீடித்து வந்தால் நாம் வேறு சில வாய்ப்புகளைப் பற்றி யோசிக்க வேண்டியதிருக்கும் .
அந்த வேறுசில வாய்ப்புகள் எது என்பதை வெளிப்படையாக விவாதிக்க முடியாது என்றார் அவர்.




(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE