......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Monday, 14 January 2013
ஹக்கீம்- சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலாசகர் சந்திப்பு
By Farhan சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலாசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர் ராஹீத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு வீடொன்றை நிர்மாணிப்பதற்கு எட்டாயிரம் டொலர்களை பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் தாம் கையளித்துள்ளதாக சவூதி அரேபிய இளவரசியின் சட்ட ஆலாசகர் யஹ்யா பின் அப்துல் அஸீஸ், ரவூப் ஹக்கிமிடம் தெரிவித்துள்ளார். ரிசானாவின் விடயத்தில் தமது அனுதாபத்தைத் தெரிவித்ததோடு, அவரது வறுமை நிலையையிட்டுத் தாம் வருந்துவதாகவும் அதனைக் கருத்தில் கொண்டே அக் குடும்பத்திற்கான வீடொன்றை நிர்மானிக்க உதவுவதற்குத் தாம் தீர்மானித்ததாகவும் தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்திற்கும், இதர சமூகங்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவைப் பேணுவதற்கும், சவூதி அரேபியாவினுடனான நல்லுறவை வளர்த்துக் கொள்வதற்கும் உதவக் கூடியவராக அமைச்சர் ஹக்கிமை தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.