கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சரினால் பயன்படுத்தப் பட்டு வந்த இரண்டு வாகனங்கள் இனந்தெரியாத கோஷ்டி யொன்றினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று அதிகாலை 2.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
பிரதி விவசாயப் பணிப்பாளரினால் பயன்படுத்தப்பட்ட கெப் ரக வாகனம் மற்றும் முச்சக்கர வண்டியொன்றும் எரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாகனங்கள் ஏறாவூர் குல்லிய்யத்து தாரில் உலூம் மத்ரசா வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.
முச்சக்கர வண்டி தீயினால் முழுமையாக எரிந்துள்ளது. கெப் வாகனம் ஓரளவு சேதமடைந்துள்ளது.
இவ்வாகனங்கள் நிறுத்தப்பட்டு சற்று நேரத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏறாவூர் பொலிஸார் இது தொடர்பான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.