......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Saturday, 5 January 2013
அரசியல் நோக்கங்களுக்காக கல்வித்துறை சீரழிக்கப்படுகின்றது: நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி
அரசியல் நோக்கங்களை பூர்த்தி செய்து கொள்வதற்காக நாட்டின் கல்வித்துறையில் மாற்றங்கள் செய்யப்படுவதாக பல்கலைக்கழக பேராசிரியர் ஒன்றியத்தின் தலைவர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சை தொடர்பிலான சர்ச்சை குறித்து கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட ஒர் இன சமூகத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர் அதிகளவில் சட்டக் கல்லூரிக்கு தெரிவானமையின் மூலம், அமைச்சர்கள் எவ்வாறு பரீட்சைகளில் தாக்கம் செலுத்துகின்றனர் என்பது புலனாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பரீட்சை முறைமையின் மீதான திட்டமிட்ட தலையீடாகவே இதனைக் கருத வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை சட்டக் கல்லூரி நுழைப் பரீட்சையில் ஒரு குறிப்பிட்ட இன சமூக மாணவ மாணவியர் அதிகளவில் தெரிவானமைக்கு அரசியல் கட்சிகளும் சில பொது அமைக்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாககவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.