......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Saturday, 5 January 2013

தனியார் வைத்தியசாலை கட்டணங்கள் தொடர்பில் விசேட கவனம்!


நாட்டில் செயற்பட்டு வரும் தனியார் வைத்தியசாலைகள் அறவிடும் கட்டணம் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை விசேட கவனம் செலுத்தவுள்ளது.

சில தனியார் வைத்தியசாலைகள் அறவிடும் அசாதாரண கட்டணங்கள் தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அச்சபை தெரிவித்துள்ளது.
மேலும் கட்டணங்கள் எதற்காக அறவிடப்படுகின்றது? எவ்விதமான சிகிச்சை அளிக்கப்படுகின்றது அதற்கான கட்டணம் என்ன என்பது தொடர்பிலும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் தொடர்பிலும் நோயாளிகள் அல்லது அவருக்கு பொறுப்பானவர் தெளிவுபடுத்தப்படவேண்டுமெனவும் நுகர்வோர் அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
தனியார் வைத்தியசாலைகள் சிலவற்றில் அதிக கட்டணம் அறவிடப்படுவதுடன் அதற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் தமக்கு தெளிவுபடுத்தப்படுவதில்லையென தமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை குறிப்பிடுகின்றது.




(virakesari)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE