அத்துடன், உயர் நீதிமன்ற வளாகத்தினுள் அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க ஊடகப் பணியாளர்களுக்கு மாத்திரமே நீதிமன்ற வளாகத்தினுள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள், சட்டவுரைஞர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்கள் முன்னிலையில் இன்று புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமானது.
எவ்வாறாயினும் விசேட கூட்டமொன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய இலங்கை வழக்குரைஞர்கள் சங்கம் இந்நிகழ்வில் கலந்துகொள்வதை தவிர்த்திருந்தது.
உத்தியோகபூர்வமற்ற சட்டவுரைஞர்கள் சார்பாக இலங்கை வங்கியின் தலைவர் ராஸீக் ஸரூக் இதன்போது வரவேற்பு உரையை நிகழ்த்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.