நாடாளுமன்றத்திற்கு எதிராக செயற்பட்டோர்,சட்டத்தரணிகள் மற்றும் தீர்ப்புகளை வழங்கிய நீதியரசர்களை நாடாளுமன்றத்தின் சிறப்புரிமையின் கீழ் அழைத்து அவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும். என்று அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.
தேசிய சுதந்திய முன்னணியின் காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
உயர்நீதிமன்றமும் மேன்முறையீட்டு நீதிமன்றமும் தத்தமது வரையறைக்கு அப்பால் சென்று நாடாளுமன்றத்தை சவாலுக்கு உட்படுத்தியுள்ளது. வியாக்கியானத்திற்காக அரசியலமைப்பில் தனக்கு தேவையானதை மட்டுமே எடுத்துக்கொண்டுள்ளது.
இதுவா? நீதித்துறையின் நியாயமான செயற்பாடு. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக்கட்சி,ஜே.வி.பி ஆகியனவும் சர்வதேச சமூகமும் பிரதம நீதியரசருக்கு பின்னால் நின்றுக்கொண்டு செயற்படுகின்றனர்.
மார்ச் மாதம் நடைபெறவிருக்கின்ற ஜெனிவா மனித உரிமை மாநாட்டை அடிப்படையாக கொண்டே இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பிழையானதாகும். புலிகளினால் பெற்றுக்கொள்ள முடியாததை பிரதம நீதியரசரின் விவகாரத்தின் ஊடாக பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கின்றனர்.
சிங்கள நாட்டில் சிங்கள நீதியரசரை பாதுகாப்பதற்கு சுமந்திரன் யார்? இவ்வாறான பின்னணியை வைத்துபார்த்தால் சர்வதேச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் சூழ்ச்சிகளுடனேயே இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது என்பது புலனாகும்.
இங்கிலாந்து நீதிமன்றத்தையே எதற்கெடுத்தாலும் உதாரணம் காட்டுகின்றனர். அந்த நீதிமன்றத்தினால் நாடாளுமன்றத்திற்கு எதிராக இதுவரையிலும் ஒரு தீர்ப்பும் வழங்கப்படவில்லை என்றார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.