-ஹனீக் அஹமட்
தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் இலங்கைப் போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று சாலை பஸ் நடத்துநர் தாக்கப்பட்டதாக எழுந்த பிரச்சினை சமாதானமாகத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நடத்துநரை தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்படும் மாணவர்கள் நேற்றைய தினம் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் வைத்து தமது குற்றத்தினை ஒப்புக் கொண்டதோடு, பாதிக்கப்பட்ட நடத்துநரிடம் மன்னிப்புக் கோரினர்.
இதனை தொடர்ந்து குறித்த விவகாரம் சுமூகமாகத் தீர்த்து வைக்கப்பட்டதாக அக்கரைப்பற்று சாலை ஊழியர்கள் சங்க செயலாளர் ஏ.எம். முபாறக் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி யூ.எம். ஹாஜா முகைதீன், இ.போ.சபையின் அக்கரைப்பற்று சாலை உதவி முகாமையாளர் ஏ.எல். ஹனீபா உள்ளிட்டோர் முன்னிலையில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் வைத்து மேற்படி பல்கலைக்கழக மாணவர்கள் மன்னிப் கோரியதையடுத்தே மேற்படி விவகாரம் சுமூகமாகத் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோது, பஸ் நடத்துநரிடமிருந்து தொலைந்து போன பணத் தொகையினையும் தாக்குதலை மேற்கொண்ட மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில் வைத்து வழங்கியுள்ளனர்.
தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்குவரத்து சபையின் அக்கரைப்பற்று சாலை பஸ் நடத்துநர் மீது, பஸ்ஸில் பயணித்த மாணவர்கள் சிலர் - தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.
இதனையடுத்து நடத்துநர் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
(tamilmirror)

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.