எம். எஸ். பாஹிம்
*அரசுடன் இணைந்த எம்.பிக்களை இடைநிறுத்துவதற்கு எதிராக வழக்குத் தாக்கல்
* ஜனாதிபதிக்கான எமது ஆதரவை எவராலும் விலக்க முடியாது
அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஐ. தே. க. எம். பி. களை இடைநிறுத்தி அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை குறைக்கும் ஐ. தே. க.வின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது. குற்றப் பிரேரணைக்கு ஆதரவளித்த ஐ. தே. க. எம். பி. களுக்கு ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு எதிராக விரைவில் வழக்குத் தொடர உள்ளதாக மனுஷ நாணயக்கார எம். பி. தெரிவித்தார்.
தகவல் ஊடகத்துறை அமைச்சின் கண்காணிப்பு எம்.பியும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரு மான மனுஷ நாணயக்கார தகவல் ஊடகத்துறை அமைச் சில் நேற்று விசேட ஊடக வியலாளர் மாநாடொன்றை நடத்திய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஐ. தே. க. எம். பி. களுக்கு ஐ. தே. க. விடமிருந்து 3 கடிதங்கள் கிடைத்துள்ளன. கட்சி செயற்குழு கூடாகவே எமக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்த ஐ. தே. க. தலைவர் தீர்மானித்துள்ளார்.
குற்றப்பிரேரணை தொடர்பில் கருத்துக்கூறவோ வாக்களிக்கவோ கூடாது என அவற்றில் உத்தரவிடப் பட்டிருந்தது. ஐ. தே. க. வின் ஜனநாயகம் இது தான்.
குற்றப்பிரேரணை விசாரணையின் போது பாராளுமன்றம் ஜுரிசபை போன்று செயற்பட வேண்டும் என ஐ. தே. க. தலைவர் கூறியிருந்தார். ஆனால் ஜுரி சபை உறுப்பினர்களான எம். பி. களுக்கு முன்கூட்டி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
குற்றப்பிரேரணை விவாதத்தின் பின்னர் மனசாட்சிப்படி சில ஐ. தே. க. மற்றும் ஐ. ம. சு. மு. எம். பி. கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ஏனைய ஐ. தே. க. எம். பிக்கள் எதிராக வாக்களித்தனர். அதன் படியே நாமும் ஆதரவாக வாக்களித்தோம். ஐ. தே. க. ஆதரவாக வாக்களித்தது அரசியலமைப்பிற்கு முரணானதாகும்.
23ஆம் திகதிக்கு முன்னர் விளக்கமளிக்குமாறு ஐ. தே. க. எமக்கு அறிவித்துள்ளது. இதற்காக சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளோம். எமக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதை இடைநிறுத்த வழக்குத் தொடரவுள்ளோம்.
18ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தது தொடர்பில் எமக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையை நிறுத்த ஏற்கனவே வழக்குத் தொடர்ந்து தடை உத்தரவு பெற்றுள்ளோம். இதன்படி எமக்கெதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்த முடியாது. இருந்தும் மீண்டும் ஒழுக்காற்று விசாரணை நடத்த ஐ. தே. க. தயாராகிறது. இதற்கும் தடைஉத்தரவு பெறவுள்ளோம்.
ஐ. தே. க. எத்தகைய முயற்சி எடுத்தாலும் ஜனாதிபதியின் பயணத்தையே அரசுடன் இணைந்து செல்லும் எமது நடவடிக்கைகளையோ தடுக்க முடியாது. நாம் இன்னும் ஐ. தே. க. உறுப்பினர்களே.
எம்மை துரிதமாக விலக்கி அரசின் பலத்தைக் குறைக்கவே முன்னாள் பிரதம நீதியரசருடன் இணைந்து ஐ. தே. க. சதி செய்தது. அது தோல்வியிலே முடிந்தது.
புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவோரே குற்றப்பிரேரணைக்கு எதிராக இருந்தனர். 2014 இல் இந்த அரசாங்கம் காலவதியாவதாக ஐ. தே. க. தலைவர் பிஸ்கட் பெட்டியொன்றை காட்டி கூட்டமொன்றில் பேசியுள்ளார். 2013ல் காலவதியாகும் பிஸ்கட்டையே அவ்வாறு காட்டி 2014ல் முடிவடைவதாக கூறியுள்ளார். ஐ. தே. க. வீழ்ச்சி அடைவதை மறைக்கவே அவர் நகைச்சுவை பேசுகிறார். இந்த அரசாங்கம் காலவதியாகாத அரசாகும். இதனை மக்களே முடிவு செய்வர் என்றார்.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.