......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Tuesday, 22 January 2013

தெரிவுக்குழுவுக்கு எதிராக மனு விசாரணைக்கு 5 நீதியரசர் குழு கோரி விண்ணப்பம்

-எஸ்.எஸ்.செல்வநாயகம்

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான தெரிவுக்குழுவின் விசாரணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்க ஐந்து அல்லது ஐந்துக்கு மேற்பட்ட உயர் நீதிமன்ற நீதியரசர்களை நியமிக்கும் படி கேட்டு நேற்று திங்கட்கிழமை சட்டமா அதிபர் விண்ணப்பமொன்றை நீதிமன்றில் கொண்டுவந்தார்.


அரசியலமைப்பின் வாசகம் 132 (3) (iii)க்கு அமைய பிரதி சொலிஸிட்டர் ஜெனரல்களான சவேந்திர பெர்னாண்டோ, சஞ்ஜே ராஜரத்னம், ஜனக டி சில்வா மற்றும் சிரேஷ்ட அரச வழக்குரைஞர் நெரின்புள்ளே ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.

சட்டப்படி முறையான பிரதம நீதியரசரை பிரதம நீதியரசரின் இடத்திலிருந்து தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலைமை காரணமாகவும் தற்போது பிரதம நீதியரசராக உள்ளவர் முறையாக நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசராக இல்லாததாலாலும் இந்த விண்ணப்பத்தை ஏற்க முடியாது என மனுதாரரான இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொது செயலாளர் மஹிந்த ஜயசிங்க சார்பாக ஆஜரான எம்.ஏ.சுமந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார்.

தற்போது பிரதம நீதியரசராக குறிப்பிடப்படுபவர் பிரதம நீதியரசரின் அறையை அல்லது பதவியை ஆக்கிரமித்திருப்பவர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சுமந்திரனின் வாதத்துடன் உடன்படுவதாக கூறிய மனுதாரர் ஜனக அதிகாரியின் சார்பில் ஆஜரான ஷிரான் கொரிய, சட்டமா அதிபர் இவ்வாறான கோரிக்கையை தொடக்கத்திலேயே விடுத்திருக்க வேண்டும். தற்போது காலம் கடந்து விட்டது எனவும் வாதிட்டார்.

மனுதாரர் தெவிநுவரவின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சுரேன் பெர்னாண்டோ பிரதிவாதிகள் ஆட்சேத்தை தெரிவிக்கவில்லை எனவும் சட்டமா அதிபர் கூட தனது வாதத்தை சட்டப்படி எழுத்து மூலம் தெரிவிக்கவில்லை என்றும் இந்த விடயத்தை இன்று கருத்தில் எடுக்க முடியாது எனவும் கூறினார்.

நீதியரசர்களான என்.ஜி.அமரதுங்க, பி.ஏ.ரத்னாயக்க, எஸ்.ஈ.வணசுந்தர ஆகியோரை கொண்டிருந்த குழாம் சட்டமா அதிபரின் எழுத்து மூல விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது அதனை பிரதம நீதியரசருக்கு அனுப்பும்படி உயர் நீதிமன்ற பதிவாளருக்கு பணித்தார்.




(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE