......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 14 January 2013

முபாரக் வழக்கை மீள விசாரிக்க உத்தரவு

எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மீதான, ஆர்ப்பாட்டக்காரர்களை கொன்ற வழக்கை மீள விசாரிக்க அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ஹொஸ்னி முபாரக்கிற்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் எழுச்சி போராட்டத்தின் மூலம் ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட 84 வயதான ஹொஸ்னி முபாரக் கடந்த ஜூன் மாதம் தொடக்கம் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார். இதில் குற்றம் சுமத்தப்பட்ட முபாரக் அரசின் உள்துறை அமைச்சர் ஹபிஸ் அல் அத்லி மீதான வழக்கையும் மீள விசாரிக்க நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
பிரதிவாதிகளின் மேன்முறையீட்டை விசாரித்த நீதிபதி அஹமத் அலி அப்தல் ரஹ்மான் வழக்கை மீள விசாரிக்க உத்தரவிட்டார். இதில் முன்னர் பயன்படுத்தப்பட்ட சாட்சியங்களைக் கொண்டே வழக்கு மீளவும் விசாரிக்கப்படும் என ஹொஸ்னி முபாரக்கின் வழக்கறிஞர்களில் ஒருவரான மொஹமத் அப்தல் ரஸாக் குறிப்பிட்டார்.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE