......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Monday, 14 January 2013
ஒபாமாவும் இரண்டு பைபிள்களும்!
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்கவுள்ள ஒபாமா 2 பைபிள்களை பயன்படுத்தவுள்ளார்.
அமெரிக்காவின் ஜபாதிபதியாக மீண்டும் எதிர்வரும் 20 ஆம் தேதியன்று தமது குடும்பத்தார் பயன்படுத்தும் பைபிளை வைத்து பதவிப் பிரமாணம் ஏற்கிறார்.
மேலும் 21ஆந் தேதியன்று நடைபெறும் சம்பிரதாயப்படியான பதவியேற்பு நிகழ்சியில் 2 பைபிள்களை பயன்படுத்த இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒன்று ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங் பயன்படுத்தியது. மற்றொன்று ஆப்ரகாம் லிங்கன் பயன்படுத்தியது.
கடந்த 2009-ம் ஆண்டு பதவியேற்கும் போது ஆபிரகாம் லிங்கனின் பைபிளை அவர் பயன்படுத்தியிருந்தார். அந்த பைபிள் 1861-ம் ஆண்டு மார்ச் 4-ந் தேதி லிங்கன் பதவியேற்றது முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆபிரகாம் லிங்கனின் பைபிளை அமெரிக்க உச்சநீதிமன்ற பணியாளராக இருந்த வில்லியம் தாமஸ் கரோல் என்பவர் வாங்கியிருந்தார்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.