ஜபலியா அகதி முகாமுக்கு அருகில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேற்படி 22 வயது இளைஞன் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும் கொல்லப்பட்ட இளைஞன் மேலும் பல பலஸ்தீனர்களுடன் இணைந்து தடுக்கப்பட்ட எல்லை வேலிப் பகுதிக்குள் ஊடுருவ முயன்றதாக இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் இராணுவம் எல்லைத் தொடர்பை நீக்கும் விதியின் கீழ் செயற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இஸ்ரேல் கடந்த 2005 ஆம் ஆண்டு காசாவிலிருந்து வெளியேறியதையொட்டி எல்லையில் ஒருதலைப் பட்சமான பாதுகாப்பு வலையத்தை பிரகடனப்படுத்தி அதன்படி செயற்பட்டு வருகிறது. இதில் எல்லை வேலிக்கு அருகில் இருக்கும் காசா விவசாயிகளின் காணிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த பகுதிக்குள் செல்ல விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு பலஸ்தீனர் காயமடைந் துள்ளார். காசாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் கடந்த நவம்பரில் 8 தினங்கள் தொடர்ந்த உக்கிர மோதலை அடுத்து ஏற்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர் எல்லை தாண்டிய தாக்குதல்கள் குறைவடைந் துள்ளன.
எனினும் இந்த யுத்த நிறுத்தம் ஏற்பட்டு இரு தினங்களுக்குள்ளாக காசா எல்லையில் இஸ்ரேல் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டார். நவம்பர் உக்கிர மோதலுக்கு பின்னர் இஸ்ரேல் இராணுவம் பாதுகாப்பு வலையத்தை 300 மீற்றரில் இருந்து 100 மீற்றராக குறைத்தது.
(thinakaran)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.