......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Monday, 14 January 2013

'கறவை மாடுகள் இறக்குமதியில்: 7500 இலட்சம் ரூபா மோசடி'

பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் அவுஸ்திரேலியாவிலிருந்து 1500 கறவை மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதில் 7500 இலட்சம் ரூபாய் ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளது. என்று தேசிய சங்க சபையின் நிதிச்செயலாளர் தின்னியாவல பாலித தேரர் தெரிவித்தார்.


எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சினால் இறக்குமதி செய்யப்பட்ட கறவை மாடுகள் பால் கறக்காது. ஏனென்றால் அந்த மாடுகள் சினை மாடுகளாகவே நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

அதிலும் பல மாடுகள் நோய்வாய்பட்டுள்ளன. நாட்டில் இருந்த மாடுகளை கொன்று குவித்துவிட்டு இறக்குமதி செய்வதில் எவ்விதமான பிரயோசனமும் இல்லை. 1500 கறவை மாடுகள் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. எனினும் மாடுகளை இறக்குமதி செய்ததன் மூலமாக 7500 இலட்சம் ரூபா ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளது.

பொது கணக்குகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் 259 நிறுவனங்களின் ஊழல் மோசடிகள் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளன.


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE