நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகள் சட்டங்களல்ல என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அரசாங்கத்துக்கு உள்ள அதிசிறந்த தெரிவு இதுவேயாகும் என ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
அரசாங்கம் குற்றப்பிரேரணையை தொடர்ந்து முன்னெடுக்குமாயின் ஐக்கிய தேசிய கட்சி அதனை எதிர்க்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பல குழுக்கள் அரசாங்கத்தை விமர்சிப்பதற்குப் பதிலாக விக்கிரமசிங்கவை தாக்கியுள்ளனர். இவர்கள், ஜனநாயகத்தின் ஆழமான கருத்துக்களை விளங்காதவர்கள் என அவர் கூறினார்.
குற்றப்பிரேரணை நாடாளுமன்றத்தினால் கையாளப்பட வேண்டிய விடயம். இதனால்தான் தெரிவுக்குழுவிலிருந்த ஐக்கிய தேசிய கட்சி ங்கத்தவர்களை மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குப் போகவில்லை எனவும் அவர் விளக்கமளித்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தில் தெரிவுக்குழுவிலிருந்த எந்தவொரு ஐ.தே.க உறுப்பினரும் நிவாரணம் கேட்டு விண்ணப்பிக்கவில்லை எனவும் திஸ்ஸ அத்தநாயக்க கூறினார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.