......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 31 January 2013

இரண்டு பிள்ளைகளின் தாய்க்கு மரணதண்டனை

-ரி.பாரூக் தாஜுதீன்

ஹெரோயின் போதைப்பொருளை  கடத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


இரண்டு பிள்ளைகளின் தாயொருவருக்கே கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மேல் நீதிமன்ற நீதிபதி பத்மன் சூரசே மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

21.76 கிராம் ஹெரோய்னை விற்பனைக்காக 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி கடத்திவந்த குற்றச்சாட்டில்  குற்றவாளியாக இனங்காணப்பட்ட கிராண்பாஸை சேர்ந்த ஒருவருக்கே மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டை அவர் நிராகரித்த போதிலும்; இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்து இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.  




(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE