......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 24 January 2013

“48 மணி நேரம் தடுத்துவைப்பதால் மனித உரிமை மீறப்படாது”


l விசாரணைக்கு போதிய அவகாசம் இருப்பதால் பொலிஸ் விசாரணையின்போது மனித உரிமை பேணப்படும்.
குற்றவியல் சட்டக் கோவை திருத்தச் சட்டத்தின் ஊடாக சந்தேக நபர் 48 மணி நேரம் தடுத்து வைக்கப்படுவதால் மனித உரிமை மீறப்பட மாட்டாது. அதற்கு பதிலாக மனித உரிமை பேணப்படும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

தடுத்துவைக்கப்படும் நபரின் மனித உரிமை பாதுகாக்கப்படும் என்பதாலேயே இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக பாராளு மன்றத்தில் கையை உயர்த்தினேன். நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்தச் சட்டமூலம் தொடர்பாக தெளிவான விளக்கத்தை வழங்கியிருந்தார் என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார்.
ஒரு சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்யும் போது அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. 12 மணி நேரத்துள் குறித்த நபரிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காக பொலிஸார் உத்திகளை கையாளலாம். இதன் காரணமாக துன்புறுத்தல்களுக்கு உள்ளாகலாம்.
எனினும் 48 மணி நேரம் என்பதால் சந்தேக நபரிடமிருந்து எளிதாக வாக்குமூலம் விசாரணைகள் செய்ய முடியும். துன்புறுத்தல் என்பதற்கே இடமில்லாமல் போய்விடும் என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இலங்கை தேயிலைச் சபையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டபோது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE