......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 24 January 2013

கிழக்கு ஆசிரிய இடமாற்றங்கள் மார்ச் 31 வரை ஒத்திவைப்பு


கிழக்கு மாகாண கல்வி வலயங்களில் புதிய ஆசிரியர் இட மாற்றங்கள் எதனையும் மார்ச் மாதம் 31ம் திகதிவரை எக்காரணத்திற்காகவும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் மருத்துவ காரணங்களுக்காக ஏதாயி னும் இடமாற்றமொன்று மேற்கொள்ள வேண்டியிருப்பின் அதற்கான அனும தியை தம்மிடம் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களையும் கேட் டுள்ளார்.

இது தொடர்பான சுற்றறிக்கை யினை மாகாணக் கல்விப் பணிப்பாளர் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் என். ஏ. ஏ. புஸ்பகுமார அனுப்பி வைத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் புதிய ஆசிரியர் நியமனங்கள் மார்ச் முதல் வாரத்தில் இடம்பெறவுள்ளதுடன் கல்முனை கல்வி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 2012ம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் தமது சொந்தப் பிரதேசங்களுக்கு கடமைக்காக அனுப்பி வைக்கப்பட்டு ள்ளனர். இவர்கள் தொடர்பான முறையான கணக்கெடுப்புக்கள் நடாத்தப்பட வேண்டியுள்ளது.
எதிர்காலத்தில் மாவட்டத்திற்கு வெளியே ஆசிரியர் இடமாற்றங்களை மேற்கொள்ளுவதற்கு பதிலாக மாவட்டத்திற்குள் சுமார் 10 கிலோ மீற்றர் தூரத்திற்குள் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யவும் புதிய நியமனங்களை வெற்றிடமுள்ள மாவட்டங்களுக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. விசேடமாக கல்முனைக் கல்வி மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது, எனவும் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆசிரிய நியமன விதிகளின்படி ஐந்து வருட கஷ்டப் பிரதேச சேவைக் காலத்தை பூர்த்தி செய்த ஆசிரியர்களை அவர்களது சொந்த கல்வி வலயங்களுக்கு இடமாற்றம் செய்யும் வேலைத் திட்டமொன்று மாகாணக் கல்வித் திணைக்களத்தில் பரிசீல னையில் உள்ளதாகவும் கிடைக்கப்பெறும் ஆசிரியர் நியமனத்தின் பின்னர் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம். ரி. ஏ. நிஸாம் தெரிவித்தார்.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE