மக்கள் கூட்டத்தின் எழுச்சியை தடுக்கும் பொலிஸின் ஆற்றலை அதிகரிக்கும் நோக்கில் கலவரங்களை தடுக்கும் வகையில் கலவரத்தடுப்பு சாதனங்களான இறப்பர் பெட்டன்கள், தலைகவசங்கள்,வாயு முகமுடிகள்,கண்காணிப்பு குண்டுகள் என்பவற்றை பெருமளவில் கொள்வனவு செய்துள்ளதாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்தது.
நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது ஜே.வி.பியின் எம்.பியான சுனில் ஹந்துநெத்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அந்த வகையில் கலவரங்களை கட்டுப்படுத்துவதற்கான சாதனங்களை கொள்வனவு செய்வதற்காக 17.37 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் கொள்வனவு செய்யப்பட்ட புதிய சாதனங்கள் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.என்றும் அவர் கூறினார்;.
இதன்போது குறுக்கிட்ட சுனில் ஹந்துநெத்தி எம்.பி, கலவரத்தை அடக்குவதற்கு மரச்சட்டங்களும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளனவா? என வினவினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன இது பொருத்தமில்லாத கேள்வியென்றார்.
நாம் எமது நடவடிக்கைகளை திட்டமிடுவதற்கு பொலிஸாரின் கலவரத்தடுப்பு ஆற்றல்பற்றி அறிந்திருப்பது நல்லது. எனக்கூறிய சுனில் ஹந்துநெத்தி எம்.பி இந்த நடவடிக்கை தொடர்பில் எமக்கு மேலும் விளக்கமாக கூறமுடியுமா? என வினவுகையில், உங்களுக்கு கண்ணீர்புகை குண்டுத்தாக்குலில் நல்ல விருப்பம் இருப்பதாக அமைச்சர் தினேஷ் பதிலளித்தார்.
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.