......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 23 January 2013

சிரியாவிலிருந்து ரஷ்ய பிரஜைகள் வெளியேற்றம்; லெபனானில் அவசர விமான சேவை


சிரியாவில் மோதல் தொடரும் நிலையில் அங்கிருக்கும் ரஷ்ய நாட்டவர் பாதுகாப்புக் கருதி தாய்நாடு திரும்பி வருகின்றனர்.
இதற்காக ரஷ்ய அரசு தமது பிரஜைகளை வெளியேற்ற லேபனானுக்கு இரு விமானங்களை அனுப்பியுள்ளது.
எனினும் பரிய வெளியேற்ற நடவடிக்கைகள் இன்னும் முன்னெடுக்கப்படவில்லை என ரஷ்யா கூறியுள்ளது.
இந்நிலையில் 150க்கும் அதிகமான ரஷ்ய நாட்டவர் சிரியாவிலிருந்து வேளியேறி அயல்நாடான லெபனானை சென்றடைந்துள்ளனர். இவர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலிருந்து ரஷ்யா அனுப்பிய இரு விமானங்கள் மூலம் தாய்நாடு செல்லவுள்ளனர்.
சிரியாவில் இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் உள்நாட்டு மோதலில் சிரிய அரசுடன் நெருங்கிய உறவை பேணும் ரஷ்யா, ஜனாதிபதி பஷர் அல் அஸாத்துக்கு ஆதரவாக செயற்பட்டு வருகிறது. எனினும் ரஷ்யா தமது பிரஜைகளை சிரியாவில் இருந்து வெளியேற்ற அவசர விமான சேவையை ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கையை ரஷ்ய விமானப்படை செயற்படுத்தி வருவதாக மொஸ்கோவிலிருக்கும் பி. பி. சி. செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவின் சிரியா தொடர்பான நிலைப்பாட்டில் அண்மைக்கால மாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் சிரிய அரசுக்கு தொடர்ந்தும் தமது ஆதரவை வெளியிட்டு வந்த போதும் அசாத் அரசு தற்போதைய மோதலில் வெற்றிபெறாது என்பதை ரஷ்யா புரிந்துகொண்டு ள்ளது.
இந்நிலையில் நீண்ட காலமாக சிரியாவுடன் ரஷ்யா நெருங்கிய உறவை பேணி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான ரஷ்யப் பிரஜைகள் சிரியாவில் வாழ்ந்து வருகின்றனர். பெய்ரூட் ஊடாக நாடு திரும்பும் ரஷ்யர்களில் பெரும்பாலோனோர் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என ரஷ்யாவின் சனல் வன் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த விமானங்களை ரஷ்ய அவசர சேவைக்கான அமைச்சே அனுப்பியுள்ளது.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE