ஆயிரம் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில், வடக்கில் தமிழ்ப் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை மாத்திரம் பூர்த்தி செய்வதற்காக இராணுவத்தினரை நியமிக்க ஏன் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கேள்வி எழுப்பியது.
சிங்கள மொழிப் பாடசாலைகளிலும் ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கணிதம் போன்ற பாடங்களைக் கற்பிப்பதற்கான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.
இருப்பினும் இது தொடர்பில் இந்த அரசாங்கமோ அல்லது இரர்ணுவமோ அவதானம் செலுத்தவில்லை என்று த.தே.கூ.வின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். (படப்பிடிப்பு - நிசல் பதுகே)
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.