......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 19 December 2012

எகிப்து ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சட்டமா அதிபர் இப்ராஹிம் இராஜpனாமா


புதிய அரசியலமைப்புக்கு எதிராக நேற்றும் ஆர்ப்பாட்டம்
நீதித் துறையினரின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சியால் நியமிக்கப்பட்ட புதிய சட்டமா அதிபர் தனது பதிவியை இராஜினாமா செய்துள்ளார்.
மறுபுறத்தில் புதிய அரசியலமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிராக நேற்றும் தலைநகர் கெய்ரோவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் சட்டமா அதிபராக நியமிக்கப்பட்ட தலாத் இப்ராஹிமுக்கு எதிராக நேற்று முன் தினம் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 1300 நீதித்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து தலாத் இப்ராஹிம் தனது இராஜினாமா கடிதத்தை உச்ச நீதிக் கெளன்ஸிலுக்கு சமர்ப்பித்துள்ளார்.
ஜனாதிபதி முர்சி கடந்த நவம்பரில் ஜனாதிபதிக்கு வரம்பெற்ற அதிகாரங்களை வழங்கும் ஆணையை பிறப்பித்ததைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் ஆதரவானவர் என குற்றம் சாட்டப்பட்ட அப்துல் மகுயிட் மஹ்மூத் பதவி நீக்கப்பட்டு இப்ராஹிம் புதிய சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஹொஸ்னி முபாரக் அரசில் மக்கள் எழுச்சிப் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட அதிகாரிகள் மீதான விசாரணையை மீள ஆரம்பிக்க இப்ராஹிம் உத்தரவிட்டார்.
இந் நிலையில் புதிய சட்டமா அதிபரை உச்ச நீதிக்கெளன்ஸில் விரைவில் நியமிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும் சட்டமா அதிபரின் இராஜினாமா குறித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உச்ச நீதிக் கெளன்ஸில் விசாரணை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே புதிய அரசியமைப்புக்கான சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிராக நேற்றும் தலைநகர் கெய்ரோவில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. ஜனாதிபதி மாளிகைக்கு முன்னாலும் தஹ்ரிர் சதுக்கத்திலும் முன்னாலும் எதிர்ப்பாளர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்ப்பாளர்களின் கூட்டணியான தேசிய மீட்பு முன்னணி தமது உரிமையை பாதுகாக்கவும், மோசடியை தடுக்கவும் அரசியலமைப்பை புறக்கணித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு எகிப்து மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது.
புதிய அரசியலமைப்புக்காக கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற முதலாம் சுற்று வாக்கெடுப்பு முறையற்றது மற்றும் வன்முறை நிறைந்தது என எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும் ஜனாதிபதி மொஹமட் முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் அறிவிப்பில் முதலாம் சுற்று சர்வஜன வாக்கெடுப்பில் அரசியலமைப்புக்கு 57 வீதமானோர் ஆதரவளித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
எனினும் எதிர்ப்பாளர்களின் தேசிய மீட்பு முன்னணியின் தலைவர்களுள் ஒருவரான மொஹமட் அல் பரதி சர்வஜன வாக்கெடுப்பை ஒத்திவைத்து எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தைக்கு வரும்படி ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகிறார். எவ்வாறாயினும் எதிர்வரும் சனிக்கிழமை இடம் பெறவுள்ள இரண்டாம் சுற்று சர்வஜன வாக்கெடுப்பிலும் இஸ்லாமியவாதிகளால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்புக்கு ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் சர்வஜன வாக்கெடுப்பின் இரண்டாவது சுற்றையும் புறக்கணிப்பதாக நீதிபதிகளின் ஒரு குழுவினர் அறிவித்துள்ளனர். தேசிய கெளன்ஸில் நீதிபதிகள் கழகமே சர்வஜன வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளது. இந்த கழகத்தின் ஒரு சில நீதிபதிகள் முதல் சுற்று வாக்கெடுப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE