......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 19 December 2012

உலகம் அழிவதற்கு பயந்து அமெரிக்காவில் ஆடம்பர பதுங்கு குழி


எதிர்வரும் 21 ஆம் திகதி உலகம் அழியும் என்ற அச்சத்தில் அமெரிக்காவின் ரொன் ஹப்பர் என்பவர் நிலத்துக்கடியில் ஆடம்பர முகாம் அமைத்து தமது குடும்பத்தினருடன் அங்கு குடிபெயர்ந்துள்ளார்.

“பாதுகாப்புக்காக நான் மூன்று தினங்கள் நிலத்தடி முகாமில் கழிக்கவுள்ளேன். உங்களிடமும் முகாம் இருந்தால் அங்கு போய்விடுங்கள். ஒன்றும் நடக்கப்போவதில்லை என நான் நம்புகிறேன். ஆனால் ஏதாவது நடந்தால்... யாருக்கு தெரியும்” என ஹப்பர் கூறியுள்ளார். மாயன் நாட்காட்டி எதிர்வரும் டிசம்பர் 21 ஆம் திகதி முடிவடைவதையொட்டி உலகம் அழியப்போவதாக வதந்திகள் உலகெங்கும் பரவியுள்ளன. இதனை நம்பும் ஒரு சிலர் பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்று வருகின்றனர். இதில் உயர் தொழிநுட்பத்திலான நிலத்தடி குண்டு பாதுகாப்பு முகாம்களை தயாரிக்கும் ரொன் ஹப்பர் கலிபோர்னியாவில் தமக்கான ஆடம்பர நிலத்தடி முகாம் ஒன்றையும் அமைத்துள்ளார்.
அதில் தொலைக்காட்சி, படுக்கை அறை, கணனி வசதி என அனைத்தும் அமைக்கப் பட்டுள்ளன. இவை 10 அடி ஆழத்தில் 50 அடி நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த காலப் பகுதியில் நிலத்தடி முகாம்களின் விற்பனையும் அதிகரித்திருப்பதாக ஹப்பர் குறிப்பிட்டார்.


(thinakaran)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE