......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Wednesday, 19 December 2012

திருப்பியனுப்புவோர் எவரும் துன்புறுத்தப்படவில்லை:இராஜதந்திரி

(டயன் சில்வா)

இலங்கையின் கரையோரமாக மனித கடத்தலில் ஈடுபட்டிருப்போர் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நிதி சேகரிப்பவர்கள் என இலங்கை உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.


யுத்தம் இடம்பெற்றபோது இவர்கள் பயங்கரவாதத்திற்காக நிதிசேகரித்தனர். இப்போது அதே நோக்கத்தில்தான் இவர்கள் மனிதக்கடத்தலில் ஈடுப்பட்டுள்ளனர் என தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அட்மிரல் திஸரசமரசிங்க நேற்று செவ்வாக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்த இராஜதந்திரி மேலும் தெரிவிக்கையில், 

அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்படுவோர் எவரும் எவ்விதத்திலும் துன்புறுத்தப்படவில்லை நாம் அவர்களை விசாரித்து விபரங்களை பதிந்துக்கொள்வோம். இதனை துன்புறுத்தல் எனக்கூறமுடியாது.

ஆனால், குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற வரலாறு உள்ளவர்களையும் ஆட்கடத்தல்களை ஒழுங்கு செய்பவர்களையும் சட்டநடவடிக்கைக்காக தடுத்துவைக்கின்றோம் இதனையே எந்தவொரு நாடும் செய்யும்.

தமது சட்டம் மீறிய செயற்பாடுகள் மூலம் பல உயிர்களை காவுக்கொடுக்க தயாராக உள்ளவர்களின் விபரங்களை எந்தவொரு நாடும் சேகரிக்கவே செய்யும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.



(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE