மலசல கூடத்திற்காகத் தோண்டப்பட்ட குழியில் வீழ்ந்த நான்கு வயதுக் குழந்தை மரணமான சம்பவமொன்று ஓட்டமாவடி காவத்தமுனை அறபா நகரில் இன்று காலை ஆறு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அரச சார்பற்ற தொண்டர் நிறுவனம் ஒன்றினால் மலசல கூடத்திற்காகத் தோண்டப்பட்டு மூடப்படாமல் மழை நீர் நிரம்பிக் கிடந்த குழிக்குள் குழந்தை விழுந்துள்ளது.
இறந்தவர் அச்சி முஹம்மது முபீதா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை சுற்றுலா நீதிமன்ற பதில் நீதிவான் பி.பிரேம்நாத்தின் பணிப்பின் பேரில் பொலிஸ் சார்ஜன் யூ.எல்.எம். அஹமது தலைமையிலான பொலிஸ் குழுவினர் ஸ்தலத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் பிரேத பரிசோதனை நடத்தினார். சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(veerakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.