ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்திற்குள் புகுந்து குழப்பம் விளைவித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட இவரை பொலிஸார் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
தனது சகோதரர் உட்பட 10 பேருடன் பாலம பொலிஸ் நிலையத்தினுள் நேற்று புகுந்த ஆராச்சிக்கட்டுவ பிரதேசசபைத் தலைவர் ஜகத் சமன்த பெரேரா தடுத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு டிப்பர் வாகனங்களை பலவந்தமாக எடுத்துச்செல்ல முயன்றுள்ளனர்.
இதனால் பொலிஸ் நிலையத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. அனுமதி இல்லாமல் கிறவல் ஏற்றிச்சென்றதை அடுத்தே இந்த ரிப்பர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
டபிள் கப் வாகனத்தில் வந்த பிரதேசசபைத் தலைவரும் அவரது ஆட்களும் பொலிஸ் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ரிப்பர்களை பலவந்தமாக எடுத்துச்செல்ல முயன்றுள்ளனர்.
இதன்போது பொலிஸ் பிரதேசசபைத் தலைவரின் சகோதரரான அஜித் சந்தன பெரேரா என்பவரை கைதுசெய்துள்ளனர். ஏனையோர் தப்பி ஓடிவிட்டனர்.
தப்பிச்சென்றவர்களை பொலிஸார் தேடிவருகின்றனர். கிறவல் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த இந்த ரிப்பர்களை பொலிஸ் இன்ஸ்பெக்டர் நஸீம் தலைமையிலான குழுவினர் தடுத்துநிறுத்தி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.
சிரமதானப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மக்களும் பொலிஸ் நிலையத்தில் குவிந்ததால் அங்கு குழப்ப நிலைமை தோன்றியது.
கைதுசெய்யப்பட்ட அஜித் சந்தன பெரேரா புத்தளம் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை டிசெம்பர் மாதம் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.(ஸ்ரீநாத் பிரசன்ன ஜயசூரிய)
(tamilmirror)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.