பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை அமர்வின் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ரோசி சேனாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்;கையிலேயே அமைச்சர் வெல்கம இவ்வாறு குறிப்பிட்டார்.
'இன்று நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக இருக்கின்றேன். ஏனெனில் எனது 19 வருட அரசியல் வரலாற்றில் இன்று ஒரு பேரழகி என்னிடம் கேள்வி கேட்டுள்ளார். அந்தப் பேரழகிக்கு பதில் அளிக்க நான் கொடுத்து வைத்தவனாக இருக்கின்;றேன். இன்று நான் பிரதி சபாநாயகரைப் பார்த்து பதில் அளிக்கப் போவதில்லை. அந்தப் பேரழிகியின் முகத்தைப் பார்த்தே நான் பதில் அளிக்கப் போகிறேன்.
இருப்பினும் அப்பேரழகியின் முகத்தைப் பார்க்கும்போது எனது மனதில் பல்வேறு எண்ணங்கள் உதிக்கின்றன. அவற்றையெல்லாம் இந்த சபையில் கூறிவிட முடியாது. பேரழகியான அவரது முகத்தைப் பார்த்துக்கொண்டே பதில் அளிக்க முயற்சி செய்கிறேன். ஆனாலும் அவரைப் பார்க்கும்போது எனது வார்த்தைகள் தடுமாறுகின்றன. ரோசியை இவ்வாறு நான் வர்ணிப்பதால் யாருக்கும் கவலை ஏற்படுகிறதோ தெரியவில்லை என்றார்.
இதற்குப் பதிலளித்த ரோசி சேனாநாயக்க எம்.பி., அமைச்சரின் இத்தகையை கருத்துக்கள் என்னை நிந்தனை செய்வதாகவே அமைந்துள்ளன. அழகைப் பார்த்து பதிலளிப்பதை விடுத்து கேள்வியின் நிலை உணர்ந்து பதில் அளியுங்கள் என்றார்.
(veerakesari)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.