......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Thursday, 6 December 2012
தமிழகத்தைக் கலக்கிய கருணாநிதி புரளி!
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக நேற்று இரவு முதல் புரளி பரவியது. இதனால் திமுகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக நேற்று இரவு முதல் தமிழகம் முழுவதும் புரளி பரவியது. இந்த புரளி சேலத்தில் இருந்து கிளம்பியதாகக் கூறப்படுகிறது.
உடல் நலக்குறைவு புரளியால் ஈரோடு, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகிள் உள்ள திமுகவினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சில இடங்களில் கடைகளை அடைக்குமாறு வற்புறுத்தியுள்ளனர். மேலும் சில இடங்களில் முன்னெச்சரிக்கையாக பல கடைகள் அடைக்கப்பட்டன என்று தெரிகிறது.
இந்நிலையில் கருணாநிதி நலமாக இருக்கிறார் என்று திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் அவர் கோபாலபுரத்தில் இருந்து அறிவாலயத்திற்கு செல்கிறார் என்று அவரது வீட்டில் இருந்து வந்த தகவல் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.