......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Thursday, 6 December 2012
தமிழகத்துக்கு உடனடியாக 10,000 கன அடி நீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
கர்நாடக அரசு காவிரியிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடி நீரைத் திறந்து விட வேண்டும் என்று இந்திய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வெள்ளிக்கிழமைக்குள் காவிரிக் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கூட்டப்பட வேண்டும். அதில், தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு எவ்வளவு நீர் தேவைப்படும் என்று கணக்கிட்டு இறுதி முடிவு எடுக்க வேண்டும்.
இது தொடர்பான அறிக்கையை திங்கள்கிழமை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
அதுவரை இன்றிலிருந்து தினமும் தமிழகத்துக்கு 10,000 கன அடி நீர் திறந்து விடப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 நாளாக நடந்த விசாரணையை அடுத்து இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.
முதலில் இந்த உத்தரவை ஏற்க கர்நாடக வழக்கறிஞர் மறுத்தார். ஆனால், இந்த தண்ணீர் திறப்பு கட்டாயம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதன் பிறகே தண்ணீர் திறக்க கர்நாடகம் சம்மதித்துள்ளது.
இது தவிர காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு ஏன் இதுவரை அரசிதழில் வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அது எப்போது வெளியிடப்படும் என்று 10ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் நாளை போராட்டம் நடத்த விவசாய அமைப்புகளும் கன்னட அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.