......................................................................................................முழு நாலும், முழு நாளும்

பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்.... ninthavurinfo@gmail.com
தினச் செய்திகள்

Thursday, 6 December 2012

56 பேர் தொடர்பில் தனித்தனியாக கூறமுடியாது: போவன்

அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்டுவதை எதிர்த்து தாம் தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்ளாவிடின் புகலிடம் கோரும் 56 தமிழர்களில் எவரையும் திருப்பி அனுப்பும் சாத்தியம் இல்லையென கூற முடியாது. என அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் கூறியுள்ளார்.


இவர்களது விண்ணப்பம் இன்று வியாழக்கிழமை விசாரிக்கப்படவுள்ளது. புகலிடம் கோருவரின் புகலிட விண்ணப்பத்தை ஆராய்ந்து முடிவு எடுக்கும்வரை இவர்களை அவுஸ்திரேலியாவில் அல்லது அவுஸ்திரேலியாவுக்கு வெளியே தங்க ஏற்பாடு செய்ய அவுஸ்திரேலிய சமஷ்டி (மத்திய) அரசாங்கம் ஒப்புகொண்டுள்ளது என்றார்.

அரசாங்கம்  தமிழர்களை திருப்பி அனுப்பவுள்ளதா என கேட்டபோது  ' இவர்களின் கதைகள் வெவ்வேறு   வகைகளில் உள்ளன' நான் இவற்றை ஒவ்வொன்றாக கூற முடியாது' என வானொலி செய்தி  சேவை ஒன்றுக்கு கிறிஸ் போவன் கூறினார்.

இந்த மக்களுக்கு பாதுகாப்பு தேவையாக உள்ளதா? என்பதை அரசாங்கம் மதிப்பிடுவுதற்கு பதிலாக எதிர்க்கட்சித் தலைவர் ரொனி அபொட்டுடனான அரசியல் போட்டியாக இதை பார்க்கின்றது என. அவுஸ்திரேலிய  பசுமை கட்சி செனட்டரான சாறா ஹன்ஸன் கூறினார்.

தமது நாட்டிலுள்ள ஆபத்தான நிலைமைக்குள் அகதிகளை கட்டாயப்படுத்தி அனுப்புவதை நிறுத்தும் வகையில் சட்டங்கள் திருத்தப்பவேண்டுமென அவர் கூறினார்.


(tamilmirror)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

ADD TEXT HERE