......................................................................................................முழு நாலும், முழு நாளும்
பின்னூட்டங்களை வரவேற்கின்றோம்....
Thursday, 6 December 2012
பிலிப்பைன்சில் புயல் : 300 பேர் பலி
பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய சூறாவளி புயலால், 300 பேர் பலியாகியுள்ளனர். பிலிப்பைன்சை சமீபத்தில், "போபா' என்ற புயல் தாக்கியது. பலத்த வேகத்தில் காற்று வீசியதால், ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
புயலை தொடர்ந்து ஏற்பட்ட கடும் மழையால், பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இந்த புயலால், மின்டானாவ் என்ற தீவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் ஏற்பட்ட, நிலசரிவில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். மீட்பு பணியில் ஈடுபட்ட, ராணுவ வீரர்கள் ஆறு பேர் பலியாகினர்.
இதுவரை, 300 பேர் புயல் மற்றும் மழைக்கு பலியாகியுள்ளனர்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.